மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கவிதை ஒன்று:
வானேகுதல்
தங்கக் கூண்டிலிருந்து விடுபடுகிறது
சிறு பறவையொன்று
இனி இரைக்கு போட்டியிருக்கலாம்
இருப்பே கேள்வியாகலாம்
ஆயினும்
அது
தன் சின்னஞ்சிறு சிறகுகளால்
அளைந்துகொண்டிருப்பது வானை.
*
இன்று எழுதிய அந்தக்கவிதையின் தொடர்ச்சி:
ஔ
வசப்படாத வானத்தின் துளிகள்
தங்கிவிட்ட சிறகுகளோடு
கூண்டுக்குத் திரும்புகிறது
சிறு பறவையொன்று
இரை இனி தேடிவரும்தான்
இருப்பும் ஊஞ்சலில்தான்
ஆயினும்
அது காத்திருக்கும்
மீண்டும் நிகழப்போகும்
அந்த வானேகுதலுக்காக!
*
Photograph courtesy: Vijay Armstrong
*