Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்

$
0
0

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் (Lord of the Rings) படங்கள் வெளியான போது பலரையும் போலவே எனக்கும் அந்தப் படங்களின் அருமை பெருமையெல்லாம் தெரிந்திருக்கவில்லை. கிராஃபிக்ஸ் நுணுக்கங்கள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளில் இருக்கும் கலைத்தன்மை, அதோடு ஃபேண்டஸி கதைகளில் எனக்கு இருந்த ஈடுபாடு போன்ற காரணங்களால் இந்தப் படங்களை ரசித்துப்பார்த்தேன் என்பது வேறு விஷயம். ஆனால் பிற்பாடு இந்தக் கதையின், படத்தின் பின்னணித் தகவல்களை ஒவ்வொன்றாக கேள்விப்பட்டுக்கொண்டே வருகையில் இந்தப் படங்களின் மீதான மரியாதையும், வியப்பும் கூடிக்கொண்டே வந்திருக்கிறது.

ஒரு சினிமாவை மனதைத் தொடும் கதைக்காகவும், அது ஏற்படுத்தும் பல்விதமான உணர்வுக்கலவைகளுக்காகவும் நாம் போற்றலாம். இன்னொரு வகையில், படமாக்கத்துக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப காரணிகளுக்காகவும் கொண்டாடலாம். இரண்டையுமே வெவ்வேறு விதமான ரசனையாக நான் கொள்கிறேன். இரண்டும் ஒரு சேர கிடைப்பது அரிதான விஷயமாகத்தான் இருக்கும் எனினும், அப்பேர்ப்பட்ட அரிதான விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. லார்ட் ஆஃப் தி ரிங்ஸின் மூன்று பாகங்களுமே அப்படியான ஒரு அரிதான சாதனைதான்.

ஒரு மிகப்பெரிய (அளவிலும், மக்களைச் சென்றடைந்த விதத்திலும்) நாவலின் சினிமா வடிவமே இந்தப் படங்கள். எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றன இந்த நாவலும், சினிமாக்களும். இதிகாசங்களைப் போலவே மிகப்பெரிய கதைக் களமும், ஏராளமான கதாபாத்திரங்களையும், கிளைக் கதைகளையும் கொண்டது லார்ட் ஆஃப் தி ரிங்ஸ். சக்தி மிகுந்த தீமைக்கு எதிராக, நன்மை எப்படி போராடி வெல்கிறது என்ற அதே விஷயம்தான் இந்தக் கதையின் பிரதான கதைக் கருவுமாக இருக்கிறது.


ஒரு தனி உலகம், கண்டங்கள், நிலப்பகுதிகள், அதெற்கென்று ஒரு தனி வரலாறு, மக்கள் கூட்டங்கள், அவர்களுக்கென்று தனித்தனி மொழிகள், தீய சக்திகள், அவர்களின் செயல்பாடுகள், வரலாறெங்கும் நிகழ்ந்த போர்கள் என இந்தக் கதையின் பின்னணியை(நாவலை)ப் பற்றி தெரிந்துகொள்வது ஒரு சமயத்தில் ஏதோ நிஜமான ஒரு உலகத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது போன்ற உணர்வே வந்துவிடுகிறது.

இப்படியொரு மிகப்பெரிய திரைப்படங்களை உருவாக்க பின்னணியில் எவ்வளவு பெரிய திட்டமிடலும், உழைப்பும் தேவைப்பட்டிருக்கும் என்பதை நாம் கணிக்க முடியும் எனினும் உண்மை நாம் நினைத்திருந்ததை விடவும் பெரிதாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு ஆர்வம் பொங்கும் ஒரு விஷயமான ’எப்படி ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சி உருவாக்கப்படுகிறது?’ என்ற கேள்விக்கு இந்தப் படத்தில் ஏராளமான சுவாரசியமான, பிரமிப்பூட்டக்கூடிய பதில்கள் இருக்கின்றன. இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களையும், விடியோக்களையும் இணையத்தில் அவ்வப்போது மேய்வதுண்டு.

ஆனால் அவையெல்லாமும் ஒருங்கே, அதுவும் அழகுத் தமிழில் ஒரு புத்தக வடிவில் கிடைத்தால்.?

எத்தனை அருமையான விஷயம் இல்லையா.!

கருந்தேள் கண்ணாயிரம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் நண்பர் ராஜேஷ் எழுதி, நாம் ஏற்கனவே நன்கறிந்த ஹாலிவுட் பாலா மற்றும் அவர்களது நண்பர்கள் சிலரின் பெருமுயற்சியால் சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘வார் ஆஃப் தி ரிங்’ என்ற மின்னூல்தான் அது.


இந்தப் புத்தகம் சுமார் 250 பக்கங்களுக்கும் அதிகமாக நாவலைப் பற்றியும், படங்களைப் பற்றியும் விரிவாக பேசுகிறது. அதன் ஒவ்வொரு பகுதியும் ஆச்சரியம்தான். நாவலாசிரியர் டோல்கீன் (JRR Tolkein), சினிமா இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன் (Peter Jackson) ஆகியோரில் துவங்கி பட உருவாக்கத்தில் சில திரைப்பட நிறுவனங்களுக்கிடையே இருந்த அரசியல், படங்களின் திரைக்கதையாக்கம், அதன் படமாக்கம், அதிலுள்ள ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் தந்த சவால், பயன் படுத்தப்பட்ட எத்தனையோ பழைய, புதிய டெக்னிக்குகள், சிஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட விதம், பல்வேறு துறை வல்லுனர்களின் பங்களிப்பு, நடிகர்களின் சலியாத உழைப்பு, நாவலுக்கும் சினிமாவுக்கும் இடையேயான ஒப்பீடு, கதாபாத்திரங்களின் அறிமுகம், நிலவமைப்பின் வரைபடங்கள் என அனைத்து விஷயங்களும் தளர்வடையாத நடையில், ஏராளமான படங்களோடு தரப்பட்டுள்ளது.

இந்தக் கதையின், திரைப்படங்களின் மீதான ஒரு தணியாத காதலாலன்றி இப்படி ஒரு அரிய முயற்சி தமிழில் நடந்திருக்காது. ராஜேஷ், பாலா மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றி.!

*

புத்தகத்தை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள இந்தப் பதிவுக்குச் செல்லவும்.
.


Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!