பீச்சில் நிகழும் லோ பட்ஜெட் சந்திப்போ, கல்யாண மண்டப ஹைபட்ஜெட் சந்திப்போ எப்படியிருந்தாலும் பதிவர் சந்திப்புகள் நடக்கலாம், கூடிக்குலாவலாம். அதற்கு எந்த விதமான எதிர்ப்பும் நம்மிடம் கிடையாது. அதில் மாற்றுக்கருத்தும் இல்ல.
ஆனால், ’பதிவர் குழுமம்’, ’பதிவர் சங்கம்’ என்ற பெயர்களில் அதுவும் குறிப்பாக ‘சென்னை’யையும் சேர்த்துக்கொண்டு ஒரு அமைப்பு இருப்பது போல பாசாங்கு செய்துகொண்டோ, அல்லது அப்படி ஒரு அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டோ, அதன் பெயரில் சந்திப்புகளோ, பிற நிகழ்வுகளையோ ஏற்பாடு செய்தால் அதற்கு ஒரு பதிவர் என்ற முறையில் நிச்சயம் என் எதிர்ப்பை இங்கு பதிகிறேன்.
இது முன்னமே பல தடவைகள் பேசப்பட்ட விஷயம்தான். ஆயினும் புதிது புதிதாக நபர்கள் தோன்றிக்கொண்டே இருப்பதால் மீண்டும் மீண்டும் பேசப்படவேண்டிய அவசியமாகிறது.
வலைப்பதிவர்கள் ஒரு குழுமமாக இணையவேண்டிய அவசியம் இல்லை, மேலும் அது என்றைக்கும் சாத்தியப்படக்கூடியதும் இல்லை. அதைச் சாத்தியப்படுத்தி அதன் முன்வரிசையில் நின்றுகொண்டு வெளிச்சத்தை, சிறு புகழை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையை ஒவ்வொரு சமயமும் யாரிடமாவது பார்க்கமுடிகிறது. நமது பெயர், மற்றவர்களிடையே பேசப்பட்டுக்கொண்டே இருப்பதிலும், நம் வலைப்பூ பிரபலமாவதிலும் யாருக்குத்தான் ஆசையிருக்காது? ஏன் எனக்கும் அந்த ஆசை இருந்தது. இருக்கிறது. ஆனால் அது ஒரு மாயை என்பதை மனம் ஏற்கத்தான் மறுக்கிறது.
பேக் டு தி பாயிண்ட், ’சென்னைப் பதிவர் குழுமம்’ என்ற பெயரில் ஒருவரோ, சிலரோ எப்படி மொத்தப் பதிவர்களையும் ரெப்ரசண்ட் செய்யமுடியும்? கருத்துகளைச்சொல்லவோ, செயல்படவோ அனைத்து பதிவர்கள் சார்பில் ஒரு சிலருக்கு யார் அந்தத் தகுதியை வழங்கியது.?
ஆகவே பிரம்மாண்டமாகவோ, அல்லது சிறியதாகவோ, 0 பட்ஜெட்டிலோ, சொந்தக் காசிலோ, கலெக்ஷன் காசிலோ நிகழ்வுகளை யாரும் முன்னெடுக்க விரும்பினால் அதற்கு ’பதிவர்’ என்ற பெயர் தலைப்பில் இல்லாமல் பொதுவாக ‘அ குழுமம்’, ’ஊ குழுமம்’ என்று ஏதாவது ஒரு பெயர் வைத்துக்கொண்டு அதை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்படியானால் ”ஒரு ‘பதிவர்’ என்ற முறையில் நான் என்ன சொல்கிறேன் என்று கேட்டால்..” என்று நானோ, என்னைப் போன்றோரோ கருத்துச்சொல்லவேண்டிய அவசியமிருக்காது.
சமீபத்தில் நிகழ்ந்த சென்னைப் பதிவர் சந்திப்பைப் பற்றி கடைசி நேரத்தில் தெரியவந்தபோது பதிவர் சந்திப்பு என்ற ஒரு ஜாலியான விஷயத்துக்கு ஏன் இத்தனைப் பிரம்மாண்டம், அதற்கான அவசியம் என்ன என்று தோன்றியது. யார் இதை நடத்துவது என்று பார்த்தபொழுது, அதில் ஓரிருவரைத்தவிர வேறு யாரையுமே எனக்குத் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ளாதது என் தவறாகவும் இருக்கலாம். ஆனாலும் ஆச்சரியமாக இருந்தது. யாரோ ஒரு சிலரின் வெளிச்சத்துக்காகவே இத்தனையும் என்றும் சந்தேகப்படத்தோன்றியது.
4 வருடங்களுக்கும் மேலாக பதிவுலகில் இயங்கிவரும் என்னிடம் ஒரு வார்த்தை ஆலோசிக்காமல்/தகவல் கூட சொல்லாமல் ‘பதிவர் குழுமம்’ என்ற பெயரில் யார் இப்படி எல்லாம் நிகழ்வுகளை முன்னெடுப்பது என்று நான் கேட்டால் அது எத்தனை அபத்தம்? என்னைப்போல இன்னும் எத்தனையோ நூற்றுக்கணக்கான பதிவர்கள் இருக்கக்கூடும் அல்லவா? அவர்களை எல்லாம் கலந்தாலோசிப்பது சாத்தியமில்லையே? ஆகவே பதிவர்கள் குழுமம் என்ற பொதுப்பெயரில் நிகழ்வுகள் நடத்துவது, மீடியாக்களுக்கு கருத்துச்சொல்வது, ஒட்டுமொத்தமாக ரெப்ரசண்ட் செய்வது போன்ற நடவடிக்கைகளை தவிருங்கள். தனி நபராகவோ, நண்பர்கள் குழுவாகவோ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு தனிப்பட்டக் குழு செய்யும் செயல்களுக்கான பின்விளைவுகளை, பொறுப்பை.. அது பெரும் பாராட்டோ, புகழோ அதைப் பொதுப்படுத்தி பதிவர்களுக்கும், அதில் ஒருவனான எனக்கும் தராதீர்கள், ஏனெனில் அப்படியான குழுக்கள் தவறு செய்ய நேர்ந்தால் அதற்கான பழியையும் நான் ஏற்கவேண்டியது வரும்.
சென்னையில் நிகழ்ந்த பதிவர் ”மாநாடு(?!)” நிகழ்வில் எனக்கு ‘சென்னை வலைப்பதிவர் குழுமம்’ சார்பில் என்ற தலைப்பைத் தவிர வேறெந்த மாற்றுக்கருத்தும் இல்லை, நன்றி.
.