Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

லயன் காமிக்ஸின் லக்கி லூக்!

$
0
0

நல் ரசனையை ஏற்படுத்துவது, அதை உயர்த்திப்பிடிப்பது, மேம்படுத்துவது என்பது ஒரு நல்ல சமூகத்துக்கான அடிப்படையான தேவை. அதையும் இளம் தலைமுறையினரிடம் அதை வலுவாகச் செய்வது என்பது அச்சமூகத்துக்குக் கிடைக்கவேண்டிய அத்தியாவசியமாகும். அதில் பல கூறுகள் இருந்தாலும் வாசிப்பு என்பது முதன்மையானதென்பதை அறிவோம். வாசிப்பை எப்படி இன்றைய பிள்ளைகளிடையே ஏற்படுத்தமுடியும்? தமிழ்ச்சூழலில் இப்படி நற்காரியங்களெல்லாம் நடக்குமென்பதை நாம் எதிர்பார்க்கமுடியாது. நடந்தாலும் அது ஆச்சரியத்துக்குரிய ஒரு செய்தியேயாகும். தமிழில் காமிக்ஸ்எனும் அத்தகைய ஆச்சரியத்தை, சேவையை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் என்ற நிறுவனம் நெடுங்காலமாக தொழில் என்பதையும் மீறிய காதலுடன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நம் சூழலில் இது அரிதான ஒன்றுதான்.

80களில் பள்ளிப் புத்தகங்கள், விளையாட்டு இவற்றைத் தவிர சிறார்களுக்கு வேறு வேலைகளே இருக்கவில்லை. அந்த ஏற்புடைய சூழலிலும் கூட வாசிப்பை தமிழ்ப் பெற்றோர்கள் ஊக்குவித்ததும் இல்லை, சிறார்களும் தன்னிச்சையாய் வாசிக்கும் வழக்கத்தை பெரும்பாலும் ஏற்படுத்திக்கொள்ளவும் இல்லை. வகுப்புக்கு ஓரிருவர் என்ற விகிதத்தில் வாசிக்கும் வழக்கம் உள்ள மாணவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். அதுவே நம் சமூகத்தின் வாசிக்கும் விகிதமாகவும் இருக்கலாம். அந்தச் சூழலிலேயே அப்படி என்றால் இன்றைய காலகட்டத்தில்? மாணவர்களின் தன்னிச்சை ஒருபுறம் இருக்க பெற்றோரின் மனநிலையே ஒரு பைத்தியக்காரனைப் போல மதிப்பெண்கள் எனும் மாயையை சுற்றிக்கொண்டிருக்கிறது. மேலும் டிவி, குத்து டான்ஸ், மொபைல் போன், SMS, சினிமா, கணினி, இணையம், பள்ளி, மதிப்பெண்கள், கட்டாய எக்ஸ்ட்ரா கரிகுலர் என எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் வாசிப்புக்கு வரவேண்டும். அப்படி ஏழு கடல் தாண்டி வருபவர்களை வரவேற்க என்னதான் நம்மிடையே இருக்கிறது?

ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியாதபடிக்கு இருக்கிறது, கொஞ்சூண்டு காமிக்ஸ். பெரும் ஆலமரமாய் பின்னாளில் தளைத்தவர்களுக்கும் துவக்கமாய் காமிக்ஸ்கள்தான் இருந்திருக்கின்றன. காமிக்ஸ், வாசிப்பைத் தூண்ட ஒரு எளிய மற்றும் வலிமையான வழி.  

கடந்த, சுமார் 40 வருடங்களாக தமிழில் காமிக்ஸை சாத்தியப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் முத்து, லயன் காமிக்ஸ் வெளியீட்டாளர்களான பிரகாஷ் பப்ளிஷர்ஸ். அதுவும் 90களுக்குப் பிறகு தமிழ் காமிக்ஸ் உலகம் தொய்வடைந்து கிடந்த பல்லாண்டுகளுக்குப் பிறகும், அதைத் தாங்கியதோடு மட்டுமின்றி, மீண்டும் ஒரு புது எழுச்சியோடு இப்போது அவர்கள் இயங்குவது ஒருவகையில் நாம் செய்த அதிர்ஷ்டமே.

இப்போதும் அதே திட்டமிடலுடன் மலிவுப்பதிப்பாக மையுறிஞ்சும் தாளில் கருப்பு-வெள்ளையில் காமிக்ஸ்கள் வந்து கொண்டிருந்தால் அது செல்லுபடியாகுமா? இன்றைய இளம் தலைமுறையைக் கவரமுடியுமா? நல்லவேளையாக காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் உயர்தர தாளில், அளவில் பெரிதாக, அச்சு நேர்த்தியுடன், வண்ணமயமாக வந்திருக்கிறார்கள். இதை தமிழ் காமிக்ஸ்களின் மறுமலர்ச்சி என்றே சொல்லலாம். இந்த காமிக்ஸ் மறுமலர்ச்சி,நம்மைப்போன்ற முன்னாள் சிறுவர்கள்/காமிக்ஸ் ரசிகர்கள்/இன்று பணம் படைத்தவர்களால் மட்டும்தான் மீண்டும் தங்கள் பால்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஆதரிக்கப்படுகிறதா என்பதை சற்று சிந்திக்கவேண்டும். அது மட்டுமே இந்த எழுச்சியின் காரணமாக அமைந்துவிடக்கூடாது. இது மீண்டும் இன்றைய இளம் சிறார்களையும் பற்றிக்கொள்வதாக அமையவேண்டும் என்பது என் ஆசை.

அந்த ஆசை, இன்னும் அ, ஆ கூட சரியாக படிக்கத்தெரியாத என் 4 வயது பையன், 4 நாட்களாக நியூலுக் ஸ்பெஷலைக் கையில் விடாமல் வைத்துக்கொண்டு, படம் பார்த்துக்கொண்டு திரிவதை காண்கையில் நிறைவேறும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.


சென்ற மாத வெளியீடான, நியூலுக்ஸ்பெஷலில் பனியில் ஒரு கண்ணாமூச்சி, ஒரு வானவில்லைத் தேடிஎன இரண்டு அட்டகாசமான படக்கதைகள். அதகளம் என்றுதான் சொல்லவேண்டும். ஓவியங்களை ரசிக்கவா? கதையோடு பரபரவென ஓடவா? சில லாங் ஷாட் ஓவியங்கள், உங்கள் கார்டூனிஸ்டுகளுக்கெல்லாம் கூட நாங்கள்தான் இன்ஸ்பைரிங்காக இருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. மேற்கை நோக்கிப் பயணிக்கும் ஒரு பெரிய குதிரைவண்டித் தொடர், பாதுகாப்புக்காக உடன்செல்லும் லக்கி லூக், சாக்லெட்டுக்காக அவரைக் கெஞ்சி சம்மதிக்க வைக்கும் சிறுவன், வண்டித்தொடரிலேயே ஒரு ஸ்டோர், சலூன், புஜ்ஜிமா பள்ளிக்கூடம் என பல்வேறு வண்டிகள், கெட்டவார்த்தை பேசும் அக்ளி பர்ரோ, டர்ர்ர்ரி டர்ர்ரிரி ம்யூசிக் என ஒவ்வொரு காரெக்டர்களும் சிரித்து சிரித்து, கன்னம் வலிக்க, என் முகத்தில் ஒரு நிரந்தரப் புன்னகையே ஒட்டிக்கொண்டுவிட்டதோ எனுமளவு நிறைவைத்தந்தன. உண்மையில் அந்த அனுபவத்தை இப்படி ஒரே பத்தியில் சுருக்காமல் ஒரு தனி பதிவாகப் போடுவதுதான் நியாயமாக இருக்கும். பல பக்கங்களில் வெடிச்சிரிப்பு, காலத்துக்கேற்ற அழகான மொழிபெயர்ப்பு என ஒரு கலக்கலான அனுபவம். தவறவிடாதீர்கள்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வம் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!!என்ற ஆன்றோர் வாக்கு இன்றைக்கு யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, பிரகாஷ் பப்ளிஷர்ஸ் திரு. விஜயனுக்கு சாலவும் பொருந்தும். தமிழில் ஏறத்தாழ இல்லை என்றே சொல்லிவிடக்கூடிய கலையாம் காமிக்ஸை, ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் என உலக மொழிகளிலெல்லாம் தேடித்தேடி அவரால் இயன்றதை இங்கு கொண்டுவந்து சேர்க்கிறார். வாழ்த்துகளும், நன்றிகளும் அவருக்கு!


.


Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!