Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

சுபா எனும் பெயரில் மூன்று பெண்கள்

$
0
0
சுபாஎனும்பெயர்எனக்குக்கொஞ்சம்ஸ்பெஷலானது.

நான்இன்றும்மிகநெருக்கமானநட்புகொண்டுள்ளஎனதுஆரம்பப்பள்ளித்தோழன் ஒருவனின் அக்காவின் பெயர் சுபா.

அந்த சுபா அத்தனை அழகானவர். அந்தச் சின்ன வயதுக்கு நான் பார்த்த மிக அழகான பெண் அவர். ஏன் அந்நாளைய ‘அண்ணன்’கள் மயங்கிக்கொண்டு திரிந்தனர் என்பது பின்னாளில்தான் எனக்குப் புரிந்தது. அவர் அழகு மட்டுமல்ல, அன்றைய அந்த கிராமத்துச் சூழலுக்கு அவரது முதிர்ச்சியும் ரொம்பவே அதிகம்தான் என்றும் இப்போது புரிகிறது. அவரது நடையில், செயலில், பேச்சில் தன்னம்பிக்கை மிளிரும். நாமெல்லாம் குழந்தைகளைக் கொஞ்சும்போது, சற்றே காமாசோமா என்று கொஞ்சிவிட்டு, ஒரு சிட்டிகை உப்பை எடுப்பது போல ஆட்காட்டிவிரலையும், பெருவிரலையும் வைத்துக்கொண்டு, குழந்தையின் கன்னத்தைத் தொட்டு, விரல்களை நம் உதட்டுக்குக் கொண்டுவந்து ‘உச்’ என்போம். அவர் கொஞ்சுவதைப் பார்க்க வேண்டுமே! பின்னெப்போதும் அப்படிக் கொஞ்சும் ஒரு பெண்ணை நான் பார்த்ததேயில்லை. ‘சிக்கிசிக்கிச்க்கி.. என் தங்கக்குச்சிச்சிக்கு.. பட்டுப்புச்சிப்புச்சிக்கு’ என்று வேகமாக அர்த்தமில்லாத ஒலிகளால் கொஞ்சுவார். அவரது தலையசைப்பும், புன்னகையும், உற்சாகமும் கொஞ்சப்படும் குழந்தையையும் தொற்றிக்கொண்டு அது கெக்கேபிக்கேவென சிரித்துக்கொண்டிருக்கும். சில குழந்தைகள் வியப்பில், சிரிக்கக்கூட தோன்றாமல் சொள் ஒழுக அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கும். முத்தம் கொடுப்பதைப் பார்க்க வேண்டுமே.. ஐந்து விரல்களாலும், உள்ளங்கையினாலும், சமயங்களில் இரண்டு கைகளாலும் குழந்தையின் முகத்தைத் தொட்டுச் சுழற்றி.. கைகளை வாய்க்குக் கொண்டுபோய், ‘ஊஊஊச்ச்ச்ச்ச்சுப்ப்ப்பூம்ம்மூச்ச்ச்ச்சு” என்று நூறு முத்தங்களின் அடர்த்தியோடு அப்படியொரு முத்தம் தருவார்.

எனக்கு ஞாபகம் இல்லையெனினும், அருகருகே வாழ்ந்த குடும்ப நண்பர்களாதலால், நான் குழந்தையாக இருக்கும்போது, அவர் சிறுமியாக என்னையும் இப்படிக் கொஞ்சியிருப்பார் எனும் நினைப்பே எனக்குப் போதுமானதாக இருந்தது. அழகே பெரும் பிரச்சினை, இந்த அழகில் வாய்கொள்ளாமல் அவர் சிரிக்கும் சிரிப்பில் அன்றைய ‘அண்ணன்’கள் பிளாப்பியாகியிருப்பார்கள் என்பது சர்வ நிச்சயம்.அவருக்குக் கணவராக வரப்போகும் மனிதரும், அவர் குழந்தைகளும் கொடுத்து வைத்தவர்கள் எனும் புரிதலும், அவரது கல்யாணத்துக்கு முன்னமே எனக்கு ஏற்படும் வயதாகிவிட்டது. எளிய வாழ்க்கையானாலும், நான் நினைத்ததைப்போலவே அழகான வாழ்க்கை அவருக்கு அமைந்தது. இன்றும் அதை மகிழ்வோடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

பின்னாளில் இன்னொரு சுபா வந்தாள் என் வாழ்வில், நண்பனின் காதலி ரூபத்தில்! பன்னிரெண்டாம் வகுப்பின் முதல்மாணவன், பின்னாளில் எஞ்சினியரிங்கில் யுனிவர்சிடி கோல்டுமெடலிஸ்ட், பெரிய வேலை என்றெல்லாம் தன் எண்ணப்படியே வளர்ந்த என் நண்பனின் அன்றைய காதலி. அவளுக்கோ திருமணத்துக்காக வருடக்கணக்கில் காத்திருக்க முடியாத அன்றைய கிராமத்துச் சூழல். காதலனோ பின்னாளில் தான் என்னவாக வேண்டும், எப்போது என்ன படிப்பு, எப்போது என்ன வேலை, எப்போது எப்படி கல்யாணம் என்பதையெல்லாம் துல்லியமாக திட்டமிட்டு வைத்துள்ள மனிதன். நிச்சயமாய் அவள் காத்திருந்தால் கைப்பிடித்திருப்பான். ஆனால், அப்போது அவனால் அவனது திட்டத்தைக் குலைத்து படித்துக்கொண்டிருக்கும்போதே கல்யாணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேறு வழியேயில்லை என்று சூழல் நெருக்கும்போது நிலைமை கைமீறிப்போய்விட்டது. இருவரும் இன்று இரு வேறு நபர்களாய், நல்லபடியாக கல்யாணம், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டாலும், அன்று இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு நான் பட்டபாட்டை என்னால் மறக்கவே முடியாது.

இப்போதும் கூட இன்னொரு நெருங்கிய நண்பனின் மனைவியாய், இன்னொரு சுபா வந்து சேர்ந்திருக்கிறாள். நவீன யுகத்தின் பிரதிநிதியாய் என்னைக் கலாய்த்து மகிழவே வந்திருப்பாள் போலிருக்கிறது.

கொஞ்சமாய் முற்போக்குச் சிந்தனையுடன் ’உன் மனைவி ரொம்ப அழகுடா’ என்று ஒரு புகைப்படத்தைப் பார்த்து நான் சொல்லியிருந்தேன் நண்பனிடம். (எதில் ஆர்வமாய் செயல்படுகிறது பாருங்கள் நம் முற்போக்குச் சிந்தனை) முதன்முறையாக அவனது நான் வீட்டுக்கு நான் சென்றிருந்த போது, ரொம்பவே ஆர்வத்தோடு அவனது மனைவிக்கு இப்படி அறிமுகப்படுத்தி வைத்தான், ‘இவந்தான்மா உன்னை அப்படி சைட் அடித்தவன்!’. படுபாவி சோற்றில் கைவைத்த போதா சொல்லியிருக்க வேண்டும்? பின்னாளில், குடும்ப நண்பர்களாகி ஒருத்தரையொருத்தர் உரிமையோடு கலாய்த்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிட்டாலும், அன்றைக்கு அந்த சுபாவுக்கு முன்னால் நெளிந்த நெளிவை மறக்க முடியாது. அதோடு இந்த சுபாவினால்தான், பெண்களிலும் கூட முதிர்ச்சியும், பெருந்தன்மையும் உள்ள ஓரிருவர் இருக்கக்கூடும் எனும் உண்மையை உணர்ந்துகொண்டேன்.

இந்த சுபாக்கள் மூவருமே என் நிஜ வாழ்வில், இணையவெளி உட்பட உலாத்திக்கொண்டிருக்கும் நபர்கள். இன்னும் கூட பல சுவாரசியங்களைச் சொல்லமுடியாத சிக்கல்கள் உள்ளன. ஆகவே பொத்தாம் பொதுவாகச் சொல்லி இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.


எனக்குப் பெண்குழந்தை பிறந்தால் சுபாவென பெயர் வைக்க வேண்டுமென்றும் கூட ஒரு எண்ணமிருந்தது. இப்போதென்ன, ஆண்குழந்தையாயினும் கூட அப்படித்தானே பெயர் வைத்திருக்கிறீர்கள் என்கிறீர்களா? எனக்கு சுபா எனும் பெயர் மிகப்பிடிக்கும், அதனால்தான் என் பையனுக்கும் அந்தப் பெயர் என்பதும் உண்மைதான். ஆனால், மேற்குறிப்பிடப்பட்டவர்கள் நிஜ வாழ்க்கைப் பெண்கள் என்பதால், அவர்களது நிஜமான பெயரை மறைத்து, சுபா எனும் புனைப்பெயரைச் சூடியல்லவா இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். J

s

Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!