எஸ்ஜி-
கோடி கோடியாக புதிய வரிகளை உனக்காக எழுத முடியும். ஆனால் உணர்வுகள் ஒன்றே.
//இப்போது நீ எப்படி இருக்கிறாய் என்பது தெரியவேண்டிய அவசியமில்லை எனக்கு. ஒரு பனிச்சிற்பத்தைப்போல என்னுள் உறைந்துபோயிருக்கிறாய் நீ. ஆழ்மனதைப்போல எப்போதும் நீ நானறியாமலே இருந்துகொண்டேதானிருக்கிறாய் என்னுடன். உன்னை நான் காதலித்தமைக்காக நம் இருவருக்கும் கிடைத்த வரமும், சாபமுமாக இது இருக்கலாம்.//
//தாய்மையின் பால்சுரப்பைப் போன்றது காதல். சுரப்பின் அதீதத்தை அனுபவிக்கும் தாய்மையை ஒத்ததாக என் காதல் இருக்கிறது. பின்பொருநாள் நான் இறந்துபோவேன். ஆனால் மூப்பு மட்டுமே அதன் காரணமாக இருந்துவிடமுடியாது.//
நான்கு வரிகள் புதிதாய் எழுதிட நேரமில்லாமல் இப்படி முன்னெழுதியதைச் சொல்லிச்சென்றாலும்தான் என்ன? என் சிந்தனையே உன்னை அணுவாக கொண்டதுதானே.. இதில் உனக்காக, காதலுக்காக என்று மட்டும் எதை நான் தனியே பிரித்துவிட முடியும்.? உணர்வுகள் ஒன்றே.
இப்படிக் கூட ஒரு நேரமில்லா நேரம் அதுவும் இன்று அமைவதும் ஒரு அழகே. என் காலம் பூராவும் உன் நேரம். அதை இன்று மட்டும் நான் விளையாடிக் கழித்ததாய்க் கொள்கிறேன்.
காதல் அன்பல்ல, காதல் காமமல்ல. காதல் உறவல்ல. (தெய்வீகமென்றே ஒன்றில்லாத நிஜத்தில்) காதல் தெய்வீகமுமல்ல. என் அகராதியில் காதல் என்பது நீ.! விளக்கம் சொல்ல இயலாத அறியாமையில் விளைவது இது.
உனக்கொரு வாழ்த்துகளைச் சொல்வதோ, ஒரு கவிதையை எழுதுவதோ, உன்னை நினைத்துக் கொண்டிருப்பதோ மட்டுமல்ல காதல். இன்றைக்கு 12 மணிக்குள் உனக்கானதைப் பதிவு செய்யும் ஒரு விளையாட்டுக்கூட காதலின் ஒரு துளியே. அரைகுறையான வார்த்தைகளுடன், அர்த்தம் விளங்கியும் விளங்காமலும் பதிவு செய்கிறேன். கோடி வார்த்தைகளை கொட்டியும் உன்னையோ, உனக்கானதையோ சொல்லிவிடவே முடியாத போது இதொன்றும் பிழையில்லை.
முழுமை நீ! உள்ளேறத் துடிக்கும் உயிர்த்துளி நான்!
இந்தச் சூழலை நீ எனக்குத் தந்தமைக்காக நாளும் நான் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும் நன்றி.!
இன்றைக்கான வாழ்த்துகள் எஸ்ஜி.
-கேகே.