கமல்ஹாஸனின் சிறந்த படங்கள் பலவும் முதல் பார்வையில் ஒரு சின்ன அதிருப்தியையே தருவதாக இருந்திருக்கின்றன. அதில் விஸ்வரூபமும் தப்பவில்லை எனலாம். ஹேராம், விருமாண்டி உட்பட நிறைய படங்கள் அந்தப் பட்டியலில் இருக்கின்றன. காரணம் கமல் மீதான நமது அதீத எதிர்பார்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் பல படங்கள் மறுபார்வையில், சில காலங்கள் கழித்து ‘பிரமாதமில்ல..’ என்று உள்ளுக்குள் சிலாகிக்க வைத்திருக்கின்றன. தசாவதாரமெல்லாம் அதிருப்தியின் உச்சம் என்று சொல்லலாம். காரணம் திரைக்கதையில் எண்ணமுடியாத அளவுக்கு லாஜிக் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் தசாவதாரத்தை நாம் வேறொரு கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்பதை பின்பு உணர்ந்தேன். அது ஒரு வழக்கமான சினிமா அல்ல, சினிமாவின் சாத்தியங்களை பரிசோதிக்க எண்ணிய ஆர்வமிக்க ஒரு கலைஞனின் முயற்சியாகவே அது இருந்தது. அத்தனைக் காரெக்டர்களையும் ஒரே திரையில் கொண்டுவருவதற்கான போராட்டம்தான் அந்த லாஜிக் மீறல்கள்! பஞ்சதந்திரம் முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது கமலின் நகைச்சுவைப்படங்களில் எனது முதல் தேர்வாக பஞ்சதந்திரம்தான் இருக்கிறது. சானல் தாவுகையில் கண்ணில் பட நேர்ந்தால் முழுதும் பார்க்காமல் விலகமுடிவதேயில்லை.
இதற்கு மேல் கதை சொன்னால் அது ஸ்பாய்லராக அமைந்துவிடக்கூடும். ஆகவே பிற விஷயங்களைக் காணலாம். இதை நான் ஒரு அருமையான கிரைம் திரில்லர் வகைப் படமாகவே காண்கிறேன். '’விஸ்'’ காரக்டரின் வடிவமைப்பு, கமல்ஹாஸனின் நடிப்பையெல்லாம் தனித்தனியேவெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவேண்டுமா என்ன? வழக்கமாக கமலின் பெரும்பான்மையான படங்களில் எனக்குப் பிடித்த ஒரு விஷயம் இருக்கும். படத்தின் சில முக்கியமான தருணங்களில் அவர் தரும் போஸ் (Posture) இது ஒரு தனிப்பட்ட ரசனை. ’'வேண்டுபவன் எடுத்துக்கோ'’ என்பது போலான ஒரு விஷயம் அது. சில விநாடிகளுக்கு ரசிக்கக் கிடைக்கும். ஒரு ரசனையான ஸ்டில் போட்டோகிராஃபரைப் போல கண்கொத்திப்பாம்பாக காத்திருப்பேன். அப்படியான காட்சிகள் இந்தப் படத்தில் அதிகம். வயது அதிகமாக அதிகமாக, ஸ்டோர் செய்யப்பட்ட ஒயினின் சிறப்பைப் போல கமலின் அழகு அல்லது ஸ்க்ரீன் பிரசன்ஸ் கூடிக்கொண்டே போகிறது. இதுவும் ஒரு தனிப்பட்ட ரசனையே. பளிச்சென விழுந்த அடியில் புதிதாய்த் தோன்றிய வெட்டுக்காயத்திலிருந்து கசியும் ரத்தத்தோடு திடுமென அவர் நிகழ்த்தும் ருத்ரதாண்டவம் பிரமிப்பு எனில் அதன் முடிவில் அவர் தரும் போஸ் மனதிலேயே நிற்கும் என்றும்.
வன்முறைக்காட்சிகள் அதிகம் என்பதாய் ஒரு பேச்சு இருக்கிறது. மறுக்கவில்லை. ரத்தக்களறி என்பதை விட ஒரே ஒரு துப்பாக்கி வெடிப்புக் கூட நமக்கு அந்த எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும். காட்சியின் அழுத்தம் அப்படி. கதைக்களம் அப்படி.
நான் முதலில் சொன்ன அதிருப்தி அல்லது படத்திலிருக்கும் தொய்வுக்கான காரணம் என்ன? நிச்சயமாக அதற்கும் காரணம் கமல்தான்.
இப்படியொரு கதையில் ஆக்ஷன், பரபரப்பை மட்டுமே முன்னிறுத்தி, கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் படத்தில் பேசப்படும் சில விஷயங்களை நியாயப்படுத்தவேண்டும் (Justification) என்ற நல்முனைப்பு யாரையும் விட கமல்ஹாசனுக்கு கொஞ்சம் அதிகமே. இந்தப்படத்தைப் பொறுத்தவரை அது சரியான முறையில் கையாளப்படவில்லையோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. வேட்டையாடுவதற்குப் புலிகளுக்கு இருக்கும் நியாயத்தைப் போலவே தாலிபன்களின் வன்முறைக்குப் பின்னாலிருக்கும் நியாயத்தையும் அவர் காட்டவிரும்பி அவர் அமைத்த ஆப்கன் காட்சிகள் படத்தின் தொய்வுக்குக் காரணமாய் அமைந்துவிட்டன. மேலும் அவர் நியாயத்தைச் சொல்வதற்காக வரலாற்றுக்குப் போவதைவிட அவர்களின் இன்றைய அவலம் நிறைந்த வாழ்க்கையை அருகில் காண்பிப்பது சரியாக இருக்கும் என்றும் நினைத்திருக்கிறார். ’உமர்’ எனும் ஜிகாதியின் எண்ணம், மனைவியிடம் அவன் நடந்துகொள்ளும் விதம், படிக்கவிரும்பும் மகனையும் ஜிகாதியாக்கிப் பார்க்கவேண்டுமென்ற அவனது வெறி, குழந்தை மனம் மாறாத ஒரு தற்கொலைப்படை நபர், துரோகத்துக்கு அவர்கள் தரும் தண்டனை, அவற்றுக்கு ஊடாக தவிப்புடன் அலைந்துகொண்டிருக்கும் கமல் என நீளும் காட்சிகள். அவை அவர் நோக்கத்தை சரியாக எடுத்துக்காட்டியதா என்பதை பொறுப்புடன் சிந்திக்கலாம்.
மேலும் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட படமானாலும் கூட இரண்டு பாகங்களும் போதுமான அளவு அதனதன் இறுதிக்காட்சிகளைப் பெற்றிருக்கவேண்டும். அதுவே நியாயமும் கூட. கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாமோ என்றொரு எண்ணம் எனக்கு.
மற்றபடி நடிக, நடிகர்களின் பங்கு, குறிப்பாக உமர் காரெக்டரில் வரும் ராகுல் போஸ், ஆக்ஷன் காட்சியமைப்புகள், கதை சொல்லும் பாங்கு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, ஆர்ட் டைரக்ஷன், சிஜி போன்றன படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. சிஜி தொழில்நுட்பத்தில் எனக்குக் கொஞ்சம் ஆர்வமிருப்பதால் (அதாவது பார்த்து அனுபவிப்பதில் மட்டும்) அவை பற்றிய கட்டுரைகள், ஆங்கிலப் படங்களின் பிகைண்ட் தி சீன்ஸ், மேக்கிங் விடியோஸ் என கவனிப்பதுண்டு. ஆகவே சிஜி காட்சிகள் என் கண்களிலிருந்து தப்பவது சற்று சிரமம்தான். நியூயார்க் நகர சேஸிங் காட்சியின் சில ஷாட்கள், ஆப்கன் மீதான அமெரிக்கத் தாக்குதல், டபுள் ரோட்டார் இராணுவ ஹெலிகாப்டர்கள், சில குண்டுவெடிப்புகள் என சிலவற்றைப் பிடித்தேன், அதுவும் கஷ்டப்பட்டு. இன்னும் பல காட்சிகள் இருந்திருக்கலாம். அந்த வகையில் அருமையான சிஜி வேலைப்பாடு.
மொத்தத்தில் டெக்னிகலி உலகத்தரமான மேக்கிங்கா என்று கேட்டால் சிறப்பு, ஆனால் இன்னும் சில படிகள் செல்லவேண்டியதிருக்கிறது என்று சொல்வேன். தலிபன் குழுக்களின் வாழிடம், குகை அமைப்புகள் முழுவதும் கடும் உழைப்பில் விளைந்த அருமையான செட்கள் என்பது பாராட்டப்படவேண்டியது எனினும் ஒரு மாற்றுக் குறைவுதான். பட்ஜெட் காரணமாக இருக்கலாம். ஆயினும் ஒரு இயக்குனராக வாய்ப்பளிக்கப்பட்டால் எந்த உலகத்தரத்துக்கும் இணையானதொரு படத்தைத் தரமுடியும் என்பதை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் என நிச்சயமாக சொல்லலாம்.
ஆப்கன் தீவிரவாதிகளும் தமிழிலும், தெலுங்கிலும் பேசவேண்டிய கஷ்டம் நமக்குக் காலகாலமாய் இருக்கிறது. என்ன செய்வது இந்தப்பிரச்சினைக்கு? மண்டை காய்கிறது. பக்கத்துப் பக்கத்து நாடுகளுக்குள்ளும், ஒரே நாட்டுக்குள்ளும் இப்படி கைகொள்ளாத அளவுக்கு மொழிகள் இருந்தால் எப்படி எல்லைதாண்டி கதைகள் சொல்வதுன் என்று வேண்டாம்? அட்ஜஸ்ட் பண்ணிக்கத்தான் வேண்டும். கமலும் நன்றாகவே மண்டை காய்ந்திருக்கிறார்.
படத்துக்கெதிராக ஏற்படுத்தப்பட்ட அதீத இஸ்லாமிய எதிர்ப்பில் நியாயமிருக்கிறதா?
1. நிச்சயமாக இல்லை. மேலும் கமல்ஹாசனின் நோக்கமும் அதுவல்ல, இது தெளிவு.
2. இது தலிபான்களின் கதை, அல்லது அவர்களை வில்லனாக சித்தரிக்கும் கதை எனவும் சொல்லலாம்.
3. தலிபான்கள் இஸ்லாமியர்கள் என்பது இஸ்லாமியர்களுக்கு ஒரு வாழ்நாள் உறுத்தல். அதில் தவறில்லை, ஆனால், தலிபான் இயக்கத்தினர் நம்மவர்கள் என்ற ஒரு எண்ணம் ஒரு இஸ்லாமியருக்கு எழுந்தால்?
இந்த இடத்தில் ஒரு விஷயம். நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு கருத்தைச் சொன்னார். சிந்திக்கத்தகுந்ததாக இருந்தது அது. பிற மதங்கள் எப்படியோ தெரியாது, ஆனால் நமக்குத் தெரிந்தவரை இந்து, கிறித்துவ மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது.
இந்து மதத்தில் இறைவழிபாடு என்பது ஒரு பகுதியாக இருக்கிறது. துன்பங்கள் நேரும் போதும், சிறப்புக்குரிய நேரங்களிலும், நாட்களிலும், விழாக்காலங்களிலும், மேலும் சில சந்தர்ப்பங்களிலும் மட்டுமே இறைவழிபாடு செய்கிறோம். இறைநாமம் புகழ்கிறோம். ஏன், நாத்திகத்துக்கும் கூட இங்கே இடமிருக்கிறது.
ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமும், வாழ்க்கையும் வேறு வேறல்ல. அவர்களின் வாழ்க்கையே இறைவழிபாடாகத்தான் இருக்கிறது. ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒவ்வொரு செயலும், உண்பதும், உறங்குவதும் கூட இறைநம்பிக்கை சார்ந்ததாக இருக்கிறது. அவர்கள் இறைவனிடம் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்கள். தினமும் ஏராளமான தடவைகள் அல்லாவின் நாமத்தைத் துதித்தபடி இருக்கிறார்கள். அன்பைப் போதிக்கும் இஸ்லாத்தை கொண்ட இஸ்லாமியர்களின் ஒரு பகுதியினர் இப்படி தீவிரவாதக்குழுக்களாக இயங்குவதே நாம் ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கிறது.
உதாரணமாக, முருகனைத் தெய்வமாக ஆத்மார்த்தமாக வணக்கும் ஒரு இந்து, ஒரு கிறித்துவன் ‘ஓம் முருகா..’ என்று சொன்னபடியே ஒரு கொலை செய்வதைப் பார்க்கநேர்கிறது என வைத்துக்கொள்வோம். அவர், அதன் பின்னணியை யோசிப்பதற்கு முன்பாக, கொலையாளி கிறித்துவனா, இஸ்லாமியனா, இந்துவா என்றெல்லாம் அடையாளம் காண்பதற்கும் முன்பாக ஒரு துணுக்குறலையும், வருத்தத்தையும் அடைவது இயற்கையே.
போலவே இஸ்லாமியர்கள், தாலிபான்களை நம்மவர்கள் என்று நினைக்கக்கூடுமோ என்ற ஐயத்துக்கே இடமில்லை. அங்கே, அந்தக் கொடுஞ்செயல்களுக்கு அல்லாவின் நாமம் பயன்படுத்தப்படுகிறதே என்பதுதான் அவர்களின் முதல் வருத்தமாக இருக்கும்.
சில பல வருடங்களுக்கு முன்னால், நாவல்களில், சினிமாக்களில் வில்லன்களாக சித்தரிக்கப்படும் ஒரு நாட்டின் பெயரையோ, குழுவின் பெயரையோ, அரசு அமைப்புகளின் பெயர்களையோ பயன்படுத்துவதையே தவிர்த்து வந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தைத்தனத்தையெல்லாம் எப்போதோ நாம் தாண்டிவந்துவிட்டோம். படைப்புகள் நிஜத்துக்கு அருகில் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். பிரதமர்கள், முதலமைச்சர்கள், சிபிஐ, ஐஎஸ்ஐ, எஃப்பிஐ, மதத்தலைவர் எனத்தெளிவாக குறிப்பிட்டே வில்லன்களை அமைக்கிறோம். போலவே, உலகெங்கும் இருக்கும் பல விஷயங்களும், அமைப்புகளும், மனிதர்களும், நிகழ்வுகளும் கதைகளில் பயன்படுத்தப்படலாம். அவற்றைக் கதைகளாக பார்க்கும்/ சகித்துக்கொள்ளும் மனப்பாங்கு வேண்டும்.
இவ்வளவு நீட்டி முழக்கவேண்டிய அவசியமெல்லாம் இல்லாமல், இந்தப் படத்துக்கு எதிர்ப்பு எழுந்ததற்கான நிஜமான காரணம் இஸ்லாமியர்கள் அல்ல, ஒரு சில அடிப்படைவாதிகளும், தமிழக அரசும்தான் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. தெலுங்குக்கும், ஹிந்திக்கும் இல்லாத எதிர்ப்பு தமிழில் எனும்போதே நாம் சற்று சிந்தித்திருக்கவேண்டும், வடக்கே இல்லாத அடிப்படைவாதிகளா, தமிழகத்தில் இருந்துவிடமுடியும் என்று. தவறிவிட்டோம். ஆனால், போலிகளின் உள்நோக்கமறியாமல், இணையத்தில் உலவும் சில இந்து, இஸ்லாமிய நண்பர்கள் விவாதத்தில் மதவாத எண்ணங்களை கொப்பளித்தது மட்டுமே கொஞ்சம் அயர்ச்சியை ஏற்படுத்தியது. நண்பர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்பலாம்.
லெட்ஸ் திங்க் அண்ட் பிலீவ் பாசிடிவ். தமிழர்களுக்கு (கவனிக்க, இந்துக்கள் அல்ல) நிறையவே பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருக்கிறது. அவ்வளவு எளிதாக மதவாத எண்ணங்களுக்கும், மத விரோதப்போக்குகளுக்கும் ஆளாக மாட்டார்கள் எனவும் நம்புகிறேன். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெரியாரின் சிந்தனை இன்னும் நம்மைத் தன் ஆளுமைக்குள்தான் வைத்திருக்கிறது எனவும் நம்புகிறேன். (இக்கருத்தைச்சொல்லி ஒரு பெரும் ஆறுதலைத் தந்த யுவகிருஷ்ணாவின் ஒரு பதிவு இங்கே).
இந்தக் கூத்துகளுக்கிடையே தினம் ஒரு கருத்து, தினம் ஒரு சூழல், தினம் ஒரு கேள்வி என சூழப்பட்ட கமல் சிந்தித்து உரையாற்றவெல்லாம் நேரம் கிடைத்திருக்காது.
“இது ஒரு சாதாரண சினிமாதான். மக்கள் வாழ்வியல் சம்பந்தமான தேசியப்பிரச்சினை அல்ல, இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்”" என்று சொன்னதுதான் நிஜமான கமல்ஹாசன்.
அப்படியிருந்தும் அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதற்கான காரணத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். அதற்குப் பணம் மட்டுமே காரணமாக இருக்கமுடியாது. படத்தின் ஒவ்வொரு பிரேமையும் ஆசை ஆசையாய், இழைத்து இழைத்து உருவாக்கிய ஒரு கலைஞனின் வலிதான் அது.
ஒரு காட்சியில், ஒரு மருத்துவச்சி சூடு பட்டு இறந்துகிடப்பார். அவர் இறந்துவிட்டாரா என அவரின் கையைத்தொட்டுப்பார்த்து சோதிப்பார் கமல். அந்த ஷாட்டின் போது இரண்டு கைகளும் அந்தப் பெண்ணின் நெற்றியைத் தவிர முகத்தை மறைத்திருக்கும். முழு முகமும் தெரிந்தால் அவர் யார், முந்தைய காட்சியில் வந்த மருத்துவர்தானா என்பதைக் காணும் ஆர்வத்தில் அவர் நெற்றிப்பொட்டில் முடிக்கற்றைக்கருகே விழுந்திருக்கும் துப்பாக்கிக்குண்டின் காயத்தை நிச்சயமாகத் நாம் தவறவிட்டிருப்போம். அடுத்த ஷாட்டில் கமல், அவர் முகத்தைக் கண்டு, காயத்தைக் காணும் காட்சியில் அவரின் முகமும் காண்பிக்கப்படுகிறது.
உயிர்காப்பதற்காக நிகழும் முதல் சண்டைக்காட்சி. அந்தப் பெரிய ஷெட்டின் ஒரு ஓரத்தில் நீர்த்துளி சொட்டிக்கொண்டிருக்கிறது. இரண்டு சொட்டுகள் விழுவதற்கு இடைப்பட்டுள்ள நேரத்தில் அந்த சண்டை நிகழ்ந்து முடிகிறது.
இப்படி எடுத்துச்சொல்ல, ரசிக்க படம் முழுவதும் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
ஒரு படைப்பு விமர்சிக்கப்படுவதை ஒரு நல்ல படைப்பாளியால் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அது புறக்கணிக்கப்படுவதையோ, கொள்பவனின் முன்னால் கடைவிரிப்பது தடுக்கப்படுவதையோ அவனால் ஏற்றுக்கொள்ளமுடியாது. கலங்கித்தான் போவான். அதுதான் அவருக்கு நேர்ந்தது. இனி ஒரு படைப்பாளிக்கு இது நேராமல் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்.
கமல் ஏன் இப்படியான ‘காண்ட்ரவர்சி’யான கதைகளைப் படமாக்கி பணம் சம்பாதிக்க வேண்டும்?
இந்தக் கேள்வியே ஒரு பெரிய அபத்தமாகப் படுகிறது எனக்கு. நான் ஒரு சாதாரண மிடில்கிளாஸ் தமிழன். எழுதும் ஆசையில் இணையத்தில் எதையோ செய்துகொண்டிருக்கிறேன். என்னளவுக்கே, என்னைத் திருப்திப் படுத்த ஏதேதோ செய்யவேண்டியிருக்கிறது. வடிவங்கள், உள்ளடக்கம் என மாறிக்கொண்டே இருக்கிறேன். எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்க்கவேண்டும் என விரும்புகிறேன். என்னை நோக்கி,
1. உனக்குக் கட்டுரைதான் நல்லா வருகிறதே, ஏன் கதை என்ற பெயரில் உசிரை வாங்குறே.?
2. இங்கதான் படிக்க இத்தனை பேர் இருக்கோமே? எதுக்கு விகடன்ல எழுதணும்னு ஆசைப்படுறே?
3. சினிமா விமர்சனம்தான் எல்லோரும் எழுதறாங்களே.. நீயும் எழுதித்தான் ஆகணுமா?
என்றெல்லாம் கேட்டால் நான் என்ன செய்யலாம்? நிச்சயமாய் என்னிடம் பதில் இல்லை. கேள்வியில் அர்த்தம் இருக்கும் போதுதானே பதிலும் உருவாகமுடியும்?
ஒரு கலைஞன், உலகளாவிய சந்தைக்குப் போக ஆசைப்படுகிறான். அது பணம் சம்பாதிப்பதாகத்தான் இருக்கட்டுமே.. என்ன தவறு அதில்? அந்தச் சந்தைக்குப் பொருத்தமான, தனக்குச் சாத்தியப்படுகிற, தெரிந்த ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறான். கலைப்படங்களுக்கும், கமர்ஷியல் படங்களுக்குமான வரவேற்பு வித்தியாசப்படத்தானே செய்யும்? எது அவனுக்கானது என்பது அவன் செய்யவேண்டிய முடிவு.
விஸ்வரூபம் எடுத்தவனிடம் போய், ‘ஏன், சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன் மாதிரி படம் எடுக்கலை?’ என்று கேள்வி கேட்டால் அவன் என்ன செய்வான்?
நம் கலைஞர்களிடமிருந்து உலகளாவிய அளவில் ‘விஸ்வரூபம்’ மாதிரியான படங்களும் வரவேண்டும். ‘தி வே ஹோம்’ மாதிரியான படங்களும் வரவேண்டும் என்பது நம் ஆசை. ஆனால் அதையும் கமலேதான் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி என்பதுதான் என் கேள்வி.
இந்தக் கேள்வியாவது பரவாயில்லை. ‘நதிநீர் பிரச்சினைக்காக என்ன செய்தாய்? மின்சாரப்பிரச்சினைக்காக என்ன செய்தாய்? விலைவாசிக்காக என்ன செய்தாய்? எங்கள் ஊரில் சாலை வசதி இல்லை, போஸ்டாபீஸ் இல்லை. நீ நஷ்டப்பட்டால் எங்களுக்கென்ன?’ என்றெல்லாம் கூட கமலை நோக்கி கேள்விகள் எழுகின்றன. கமல் தமிழக முதல்வராகவோ, எம்மெல்லேயாகவோ, குறைந்த பட்சம் வார்டு கவுன்சிலராகவோ எப்போதாவது இருந்திருக்கிறாரா? சொன்னால் தெரிந்துகொள்வேன், எனக்குக் கொஞ்சம் பொது அறிவுக்குறைபாடு உண்டு. ..முடியல..
கட்டுரை நீண்டுகொண்டே செல்வதால் மொத்தத்தில் ’விஸ்வரூபம்’ தவறவிடக்கூடாத படம் என்று கூறி முடித்துக்கொள்கிறேன்.
இறுதியாக எங்களூர்ப் பக்கம் கிழங்கட்டைகள் சொல்லித்திரிந்த ஒரு பழமொழி ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. சொன்னால், கமலின் சூழலுக்கு அவருக்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால் நான் கமல் அல்லன் என்பதால், பல திசைகளிலிருந்து வரும் தாக்குதலுக்குப் பயந்து வாயைப் பொத்திக் கொண்டு எஸ்கேப்பாகிறேன். ஒரு பழமொழியைக் கூட சொல்லமுடியாத அளவுக்கான சூழல் நலத்துடன்தான் நாம் இருக்கிறோம் என்பது சேதி! நன்றி, வணக்கம்!
என்னைக் கவர்ந்த மேலும் இரண்டு விஸ்வரூப விமர்சனங்கள்.
கருந்தேள் ராஜேஷ்
கேபிள் சங்கர்
*************
பி.கு:
முதலில் DTH ரிலீஸில் பார்க்க எண்ணியிருந்தும் பொங்கல் விடுமுறைக்கு சரியாக 10 தேதி நான் ஊருக்குச்செல்ல டிக்கெட் எடுத்து வைத்திருந்தமையால் படத்துக்கு முன்பதிவு செய்யவில்லை. 1000 ரூபாய் அதிகம் எனினும் ஒரு முதல் நிகழ்வில் பங்கேற்கவேண்டும் என்ற ஆசையிருந்தது. அது போச்சே என்ற ஆதங்கம். ஆனால், படம் ரிலீஸ் தள்ளிப்போனது. DTH ரிலீஸ் குழப்பங்களைப் பொறுத்தவரை 'துணிந்தபின் எண்ணிய கமல்' என்று நான் கூட தூற்றினேன். ஆனால் அவர் சகலவிதங்களிலும் கார்னர் செய்யப்பட்ட பின்னணி தெரியவருகிறபோது என்ன சொல்வது எனத் தெரியவில்லை.
அடுத்து அறிவிக்கப்பட்ட 25ம் தேதி ஊரிலிருக்கமுடியாமல் கடமை அழைக்க, அறிவிக்கப்பட்ட 10 நாட்களுக்கு முன்னதாகவே ராய்பூர் வந்துவிட்டதால் தமிழில் பார்க்கமுடியாமல் போகிறதே என்ற ஒரு சின்ன வருத்தம் இருந்தது. சரி, ஹிந்தியில் பார்த்துவைப்போம் என நினைத்திருந்தவனுக்கு மீண்டும் சிக்கல். பொதுவாக வெளியூர் சுற்றுப் பயணங்களில் ஒரு படம் பார்க்க நேரம் ஒதுக்குவதொன்றும் பெரிய சிரமமான காரியமில்லை. ஆனால் இந்த முறை சற்று கடினமான சூழல். நிறையவே மெனக்கெட வேண்டியதிருந்தது. அப்படி நேரம் ஒதுக்கி, தியேட்டர் தியேட்டராக அலைந்த பின்புதான் தெரிந்தது ஹிந்தி ரிலீஸ் பிப்.1 என. அதே நேரம், தமிழிலும் ரிலீஸ் ஆகவில்லை என்ற செய்திக்கு வருந்துவதா, மகிழ்வதா தெரியவில்லை.
பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு நாள் வேலையாக, இடையே வைசாக் செல்ல நேர்ந்தது. ஜெகதாம்பா என்றதொரு நல்ல ஒலி, ஒளியமைப்புடனிருந்த 70mm தியேட்டரில் தெலுங்கு வெர்ஷன் பார்க்க நேர்ந்தது. நம்புங்கள். டிக்கெட் விலை 50 ரூபாய்தான். நல்ல கூட்டம், குதூகலம். முதல் சண்டைக்காட்சியில் திரையரங்கில் எழுந்த ஆர்ப்பரிப்பு அட்டகாசமானது. பாடல்களையும், வசனங்களையும் தமிழில் கேட்கமுடியாதது ஒரு பெருங்குறைதான். ஆனால் நான் தமிழ்நாட்டில் இருந்திருந்தால், இப்போது கூட பார்த்திருக்கமுடியுமா தெரியவில்லை.
எவ்வளவு கட்டுக்கதைகள், சாதி, மதச் சாயங்கள், கற்பிதங்கள், கேள்விகள்? 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களைத் தன் சினிமாவினால் எண்டெர்டெயின் செய்ய, தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கலைஞனை நாம் இன்னும் கொஞ்சம் பெட்டராக பார்த்துக் கொள்ளலாம், இனியாவது. நன்றி.
*
சரி, விஸ்வரூபத்துக்கு –தெலுங்கு- வருவோம்.
ஒரு இந்திய உளவாளி, ஒற்றறிவதற்காக ரகசியத்திட்டம் ஒன்றின் கீழ் அல்-காய்தா இயக்கத்தில் இடம்பெற்று சில காலம் இருந்துவிட்டு, பின்பு அதன் பலனால் அவர்களின் அமெரிக்க நாசவேலைகளை முறியடிக்கும் பணியில் ஈடுபடுகிறான்.