திருநெல்வேலி நண்பர்கள் கவனத்திற்கு:
எந்தவொரு நோய்க்குமெதிரான விழிப்புணர்வு மற்றும் பல்வேறு வகையான சேவைகளை முன்னெடுப்போர்களில் பெரும்பாலானோர், அந்த நோயினால் நேரடியாக, மறைமுகமாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஏனெனில், அந்த வலியை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அது இன்னொருவருக்கு வேண்டாம் எனும் நல்ல நோக்கம் அவர்களுடைய செயல்பாட்டுக்குக் காரணமாகயிருக்கும். மற்றவர்களுக்கு அந்த நோய் ஒரு செய்தி, அவ்வளவே! நமக்கு ஏற்படாதவரை இங்கே எந்த வலியுமே புரிந்துகொள்ளப்படுவது கடினம்தான்! மாற்றுத்திறனாளிகளின் துயரை ஓரளவு அறிந்திருந்தாலும் கூட இத்தனை நீட்டி முழக்கிக் கொண்டு செல்லும் எனக்குமே கூட இதைப் புரிந்துகொள்ள ஒரு சொந்த அனுபவம் தேவைப்படுகிறதுதான்!
சமீபத்தில், என் தந்தையாரின் சிகிச்சைக்காக திருநெல்வேலியில், இரத்தச் சேகரிப்பு வேலையில் ஈடுபட்டபோதுதான், அந்தத் துறையின் போதாமையை அருகில் கண்டுகொள்ள முடிந்தது. நெல்லையில் ஏற்கனவே சில பல அமைப்புகள், இரத்ததானக் குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம், ஆயினும் அவை இன்றைய இணைய உலகில், சென்னையைப் போல எளிதில் கண்டடைய முடியாத நிலையில் இருப்பதை உணரமுடிந்தது. வேறொரு நோயாளி B+ இரத்தத் தேவைக்காக இரண்டு நாட்கள் காத்திருந்த நிலையில், கடைசியில் எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரைத் தேடிக்கண்டு பிடித்துக் கொண்டு செல்ல நேர்ந்தது. வேறு காரணங்களுக்காகத் தற்காலிகமாக, சென்னையிலிருந்து நெல்லை மண்ணுக்குத் திரும்பிய நான், தொடர்ந்து இங்கேயே இருக்கும்படியான சூழல் இருப்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அப்படியே இப்படி ஒரு நல்ல காரியத்தை ஒருங்கிணைக்கும் பணியையும் செய்வோமே எனும் எண்ணத்தில், இந்த “நெல் இரத்ததானக் குழு”வைத் நண்பர்களோடு இணைந்து துவக்குகிறேன்.
கீழ்க்காணும் குறிப்புகளை/விதிகளை ஏற்கும் நண்பர்கள் இந்தக் குழுவில் இணைந்து சேவையாற்ற வரும்படி அன்போடுக் கேட்டுக்கொள்கிறேன்.
1. இக்குழுவில் இணைந்து தகுந்த இடைவெளியில் தொடர்ந்து இரத்ததானம் செய்ய விரும்புவோர் நெல்லை/தூத்துக்குடி மாவட்டங்களில் வாழ்பவராக இருக்க வேண்டும்.
2. வெளியிடங்களில் வசிக்கும் நெல்லை மண்ணின் மைந்தர்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்களை இக்குழுவில் இணைத்திட எங்களை ஒரு ஆலோசகராகத் தொடர்புகொள்ளலாம்.
3. ஆண், பெண் இருபாலரும் இணைந்துகொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 55 வரை.
4. குழுவில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள், தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் (வாட்ஸப் இணைப்பு கொண்டது), இரத்த வகை, மெயில் ஐடி, பேஸ்புக் ஐடி ஆகியவற்றை எனது மெயிலுக்குத் (thaamiraa@gmail.com) தரவும். விரைவில் உருவாக்கப்படவிருக்கும் பேஸ்புக் குழுமத்திலும், வாட்சப் குழுமத்திலும் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். இக்குழுக்களில் இணைய விருப்பமில்லாதவர்கள் அதைத் தனியே குறிப்பிடலாம்!
5. சராசரியாக 4 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொருவரும் இரத்ததானம் செய்ய, குழுவாக/ அல்லது விருப்பதிற்கேற்ப தனியே சென்றிட நினைவூட்டப்படும்.
6. சராசரியாக 4 மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு ஞாயிற்றுக்கிழமை கொடையாளர்கள் சந்திப்பு நடத்தப்படும்.
7. ’நெல் இரத்ததானக் குழு’ துவக்கத்தில், திருநெல்வேலி, சுதர்சன் மருத்துவமனை வளாகத்தில் இயங்கும், லைஃப்லைன் இரத்தவங்கியோடு இணைந்து பணியாற்ற இருக்கிறது.
இந்தச் செய்தியைப் பகிர்ந்து பரவலாக்க உதவுங்கள்!
நன்றி!