வழக்கமா எழுதப்போற விஷயத்துக்கு பில்டப் குடுக்குறது நம் வழக்கம்னாலும் இந்த விஷயத்துக்கு முன்னுரை எழுதலைன்னா அடிக்க வந்தாலும் வந்துருவீங்க. ஆகவே இங்கு முன்னுரை என்பதாவது என்னவெனில் பின்வருவது ஒரு கனவு.
எங்கள் தெருவான அகன்ற, நீண்ட பாரதி தெருவைக் குறுக்காக வெட்டிக்கொண்டு நான்கைந்து சிறு தெருக்கள் உள்ளன. அப்படியான ஒரு தெருவான கம்பர் தெருவின் முதல் வீடுதான் எங்களுடையது. முதல் வீடு என்பதால் மட்டுமல்ல எங்கள் வீட்டின் வாயில் பிரதான பாரதி தெருவில் இருப்பதால், வீடு பாரதி தெருவில் இருக்கிறது என்றும் கொள்ளலாம். தரைத்தளத்தில் இப்போது யாருமில்லை. முதல் தளத்தில் நாங்கள் வசிக்கிறோம். கம்பர் தெருவில் வெறும் குடியிருப்புகள் என்பதால் அங்கே எனக்கு வேலையெதுவுமில்லை எனினும், சுபா சைக்கிள் பழகுகையில் நானும் கூடவே ஓடியிருக்கிறேன் என்பதால் தெருவை நன்றாகவே அறிவேன். அது ஒரு டெட் என்ட் தெரு.
அந்திக்கருக்கலில் போலீஸ் சைரன் ஒலி கேட்டு பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தால் கம்பர் தெருவின் டெட் என்ட் வீட்டருகே ஒரு போலீஸ் கார். அடாடா, என்ன பிரச்சினை என்று தெரியவில்லையே, நம் தெருவின் பெயரும் நாளை பேப்பரில் வந்துவிடும் போலிருக்கிறதே! என்ற பரபரப்பும், என்ன குற்றம் நிகழ்ந்ததோ? என்ற வருத்தமும் எழுந்தது. சரி, கீழிறங்கிச்சென்று பார்ப்போம் என்று நான் இறங்க, ரமாவும் கூடவே இறங்கினாள். சுபாவும் அவள் கையைப் பிடித்துக்கொண்டு இறங்கினான். வீட்டைப் பூட்டாமல் மூவரும் இறங்குகிறோம் என்ற பிரக்ஞை ஒரு புறம் இருக்க, வாயிலைத்தாண்டாது நின்று பார்ப்போம் என நினைத்துக் கொண்டேன்.
ஆச்சரியம்! தெருவின் உள்முனையில் குற்றமேதும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை. மாறாக ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் புதிதாக தோன்றியிருந்தது. அதன் வாயிலில்தான் அந்த போலீஸ் வண்டி நின்றுகொண்டிருந்தது. இந்தச் சின்னத்தெருவுக்குள், அதுவும் இப்படித் திடுமென ஒரு போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டிய அவசியமென்ன? என்ன அரசாங்கமோ என்று சலித்தபடி நான் ஆச்சரியப்பட, ரமாவோ அசுவாரசியமாக வாயிலில் இருந்த டெலிபோன் கம்பத்தினருகே தரையில் அமர்ந்துவிட்டாள். அவள் அப்படிச் செய்பவளே அல்லள். இன்னும் சற்று ஆச்சரியம் எனக்கு. அசங்கலான சூழலையும், இந்த விநோதமான நிகழ்வுகளையும் காணும்போதே நான் கணித்திருக்க வேண்டும், நான் இருப்பது கனவில் என்று.
தொடர்ந்து 'வா மேலே செல்வோம்'என ரமாவிடம் சொல்லிவிட்டு படியேறினேன் சுபாவுடன். சரியாக அப்போது ஏரியா முழுதும் கரன்ட் கட்டாகியது. ரமா எழுந்து பின்தொடர மீண்டும் அவளிடம் சொன்னேன், 'ரொம்ப புழுக்கமாக இருக்கிறது, நாங்கள் இரண்டாம் தளத்தில் உள்ள அறைக்குச் செல்கிறோம் படுக்க. அங்கே சற்று காற்றோட்டமாக இருக்கும். நீ வீட்டை பூட்டிவிட்டு மேலே வா'. ஊஹூம். எங்கள் வீட்டில் இரண்டாம் தளமே கிடையாது. வெறும் மொட்டைமாடிதான். இப்போதும் நான் சுதாரிக்கவில்லை.
நாங்கள் இருவரும் இரண்டாம் தளத்துக்குச் சென்று அங்கிருந்த அறைக்குள் நுழைந்தோம். கிராமத்து வீடுகள் போல நான்கைந்து அறைகள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்டு இருந்ததைப் பார்த்ததும்தான் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன். இந்த அறையே கோளாறாக இருக்கிறது, ஏதோ சிக்கல். சரியாக ரமாவும் மேலே வந்து முதலறையில் உள்ள கட்டிலில் படுத்தபடி 'கீழே வீட்டைப் பூட்டமுடியவில்லை, கதவு இறுக்கமாக இருக்கிறது. நீங்களே பூட்டிவிட்டு வாருங்கள்'என்று அலட்சியமாகச் சொன்னாள். இதுபோன்ற விஷயங்களில் அவள் அலட்சியமாக இருப்பவளே அல்லள். பிடிபட்டுவிட்டது.
ஐய்யய்யோ, நான் கனவில் இருக்கிறேன். அதுவும் இது சாதாரண கனவு அல்ல, அமானுஷ்யமானது. முதுகுத்தண்டு சில்லிட்டது.
இதுவரை அமானுஷ்யமாக ஏதும் நடக்கவில்லை, எனினும் எனக்குத் தெரியும் நான்தானே இதன் இயக்குனர். சுபாவை, ரமாவுடன் பத்திரமாக கூடவே படுக்கச்சொன்னேன். இப்போது, முதல் வேலையாக நான் உடனே கீழே சென்று வீட்டைப் பூட்டிவிட்டு மேலே வந்துவிடவேண்டும். நான் கீழே சென்றால் இவர்கள் மேலே தனியாக இருப்பார்கள். விரைந்து வந்து விடலாம், வீடு பூட்டப்பட வேண்டும். ஆபத்து! கதவைத் திறந்து இரண்டாம் தளத்திலிருந்து முதல் தளத்துக்கான படிக்கட்டின் அருகே சென்றேன். இப்போது ஒரு பெரிய தயக்கம் சூழ்ந்தது. அப்போதுதான் அந்த விநோதமான 'கிய்ய்ய்ய்.. கிய்ய்ய்ய்..'ஒலி மெதுவாக முனகலாகக் கேட்டது. தாமதமாகிவிட்டது. படிக்கட்டில் அவை காத்திருக்கின்றன.
தாக்குவதற்கு ஏதாவது வேண்டும். எத்தனைக் கனவுகளில் பார்த்துவிட்டோம், இனியும் இவற்றுக்குப் பயப்படக்கூடாது. பார்த்துவிடுவோம் ஒரு கை. அருகில் கிடந்த ஒரு மரத்தடியை எடுத்துக்கொண்டேன். இறங்கினேன். அவ்வளவுதான்! நெளி நெளியாய், புகை புகையாய் அவை என் மீது வந்து அப்பின. ஆஆஆ!
இது வலியா? தகரத்தில் நகத்தால் கீறுவது போல தாங்கமுடியாத ஒவ்வாமை. ச்சே! இப்போதுதான் உறைக்கிறது. நாம் இந்தக் கனவிலிருந்து விழித்துகொள்வதுதான் ஒரே வழி. இவ்வளவு நேரம் இது தோன்றவில்லையே! கைகால்களை உதறியபடி கத்திக்கொண்டு விழிக்க முயன்றேன். முடியவில்லை. எத்தனை முறை சட்டென விழித்துக்கொண்டு, கனவிலிருந்து விடுபட்டு அதை நினைத்து சிரித்துவிட்டு மீண்டும் நிம்மதியாக உறங்கிப்போயிருக்கிறேன். அதைப் போலத்தான் இதுவும். எப்படியாவது எழுந்துவிடு. வித்தியாசமாக இருமிக்கொண்டால் விழிப்பு வந்துவிடும். இல்லையே, எப்படி அது? அதுபோல இப்போது இரும முடியவில்லையே. கழுத்தில் இவை பின்னிக்கொண்டு கிடக்கின்றனவே.. வேறு என்ன செய்யலாம்? ரமாவையே எழுப்பச்சொல்லிவிட்டால் என்ன? நல்ல யோசனை. கடித்துக்கொண்டிருந்த அவற்றைப் பிய்த்தெறிந்தபடி மேலே ஏறி அறைக்குள் நுழைந்தேன்.
சுபாவை டிஸ்டர்ப் செய்துவிடாமல் கட்டிலில் படுத்திருந்த ரமாவை உலுப்பினேன், நல்ல வேளை எழுந்துவிட்டாள். 'தங்கம், என்னை உலுப்பிவிடு. நான் விழிக்க வேண்டும். இது ஒரு பயங்கரமான பேய்க்கனவு'என்றேன். புரியாமல், விழிக்காமல் சட்டென புரிந்துகொண்டாள். என் தோள்களைப் பிடித்து உலுக்கிவிட்டபடி, ஆனால் உடனேயே சொன்னாள், 'என்னங்க, நீங்க தூங்கிகிட்டிருந்தா என்னை எப்படி எழுப்பமுடியும்? நானும் உங்க கனவுலதான் இருக்கேன். இது பிரயோஜனமில்லை, நிஜமான என்னை நீங்க எழுப்பணும்'. என் ரமாவா இவ்வளவு அறிவோடு பேசுவது? அந்த வேதனையிலும் சின்ன மகிழ்ச்சி எனக்கு. தொடர்ந்து, 'நீ சொல்வது சரிதான். ஏதாவது செய், என்னால முடியல.. எப்படியாவது என்னை எழுப்பு'என்று அங்கேயே கீழே விழுந்தேன். 'ஊம், எனக்குப் பயமா இருக்கு, நீங்க படுத்தா நான் போகமாட்டேன். வாங்க ரெண்டு பேரும் போய் ரமாவை எழுப்புவோம்'என்றாள். சரியென்று சமாளித்துக் கொண்டு எழுந்தேன். சிரமப் பட்டுக்கொண்டு அடுத்த அறைக்குள் நுழைந்தோம். சரிதான், அதோ அந்தக் கட்டிலில்தான் நிஜமான ரமா படுத்திருக்கிறாள். ஆனால்.. இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர் பூட்டிய வீட்டுக்குள்?
கட்டிலுக்கும், எங்களுக்கும் இடையே இரண்டு மூன்று குழந்தைகள் சும்மா தேமேயென ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுக் குழந்தைகளா? நிஜ உலகில் சுபாவுடன் விளையாட வந்தவர்களா? இல்லையில்லை, இன்னும் கனவு முடியவில்லை. இவர்கள் கனவுக்குள் இருக்கும் பேய்க்குழந்தைகள். என்ன வேண்டுமானாலும் செய்துவிடக்கூடியவை. ஓமன் படம் நினைவிருக்கிறதல்லவா? அய்யய்யோ, நிஜ சுபாவையும், ரமாவையும் இவை ஏதும் செய்துவிடக்கூடாதே! மிகக்கவனமாக அவற்றை விலக்கிவிட்டு ரமாவை நெருங்கினேன். தொட்டதுமே விழித்துக்கொண்டாள். மிக அழகாக சிரித்தாள். என்னுடன் வந்த ரமாவைக் காணவில்லை. 'என்னை எழுப்பி விடு ரமா...'என்றேன் மீண்டும்! ச்சை! இது குழப்பம். கனவுக்குள்ளேயேதான் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இவளும் நிஜமல்ல! இது சாத்தியமல்லாத வழி!
இருமிக்கொண்டு விழித்துக்கொள்! கத்தினேன்! தலையைப் பிய்த்துக்கொண்டேன்! உஸ்ஸ்ஸ்! ஒரு வழியாய் விழித்துக்கொண்டேன்!
கரன்ட் இல்லை, வியர்வையில் கிடந்தேன். அப்பாடி, இது நிஜமாகவே எங்கள் வீடுதான், எங்கள் படுக்கையறைதான். பார், ஷெல்பில் புத்தகங்கள்! நிஜமாகவே விழித்துக்கொண்டுவிட்டேன். நிம்மதியாக இருந்தது. வழக்கம் போல முதலில் சிரிப்பு வந்தது. பக்கத்தில் ரமா. அடுத்து சுபா. தொட்டதும் விழித்துக்கொண்டாள். தூங்காமலிருக்கிறாளா?
'என்ன தூங்கலியா?'என்றேன்.
'கரன்ட் போச்சில்ல, எழுந்து தண்ணி குடிச்சிட்டு, ஜன்னல் திறந்து வைச்சிட்டு இப்பதான் படுத்தேன். நீங்க முழிச்சிட்டீங்க!'.
சின்ன சந்தேகத்தோடு கேட்டேன், 'நான் ஏதும் சத்தம் போட்டேனா இப்ப?'.
'இல்லையே, என்ன?'.
இப்போது சின்ன எரிச்சல், 'எப்பிடியும் முக்கிட்டு முனகிட்டு இருந்திருப்பேன். லேசா தோளைத் தொட்டிருக்கலாம்ல..'
'என்ன விளையாடுறீங்களா? இன்னைக்குதான் குறட்டைக் கூட விடாம அமைதியா, அழகா தூங்கிட்டிருந்தீங்க! எழுப்பணுமாம்ல.. மூஞ்சைப் பாரு!'
.