பியர்ஸ் பிராஸ்னன் காலத்திய ஜேம்ஸ்பாண்ட் ரசிகன் நான் என்ற போதிலும் காலத்திற்கேற்ப கதைப்பாங்கிலும், ஸ்டைலிலும் நிறைய மாற்றங்களைத் தாங்கி வந்திருக்கும் ஜேம்ஸின் இன்றைய டேனியல் கிரெய்க்தான் அந்தப் பாத்திரத்துக்கு மிகப்பொருத்தமாகயிருக்கிறார் என்பது என் எண்ணம். பிராஸ்னன் ஒரு அழகான ஜோம்ஸ்பாண்ட் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அது மட்டும் போதுமா? எல்லோராலும் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படும் ஷான் கானரி ரொம்பவும் சினிமாடிக்கா இருக்குற மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங். ஒரு வேளை படங்கள் ரொம்ப பழசாயிட்டதால் எனக்கு அப்படித் தோன்றுகிறதோ என்னவோ?
ரோஜர் மூரும் அப்படியே. அதுவும் இந்தியாவில் பெரும்பகுதி கதை நடக்கும் படமான ‘ஆக்டோபஸி’, ஜேம்ஸ் படங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகும். ஆனால் அதுவே இப்போ பார்த்தால் நிறையவே டுபாகூர்தனமாக இருப்பது தெரிகிறது. பொதுவாகவே இந்த சீரிஸே ஒரு பெரிய டுபாகூர் சீரிஸ்தான் என்பதால் தனித்தனியே அது பெரிய டுபாகூரா இல்லை, இது பெரிய டுபாகூரா என்று ஆராய்ச்சி பண்ணாமல், ஜஸ்ட் என்ஜாய் பண்ணிவிட்டுப்போவதுதான் நல்லது.
கூர்மையான நீல நிறக் கண்கள், கம்பீரம், உடற்கட்டு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகம் என கிரேய்க்தான் என்னோட பெஸ்ட் ஜேம்ஸ்பாண்ட்! அதுவும் காஸினோ ராயலில் சும்மா பரபரன்னு பத்திக்குமே ஒரு சேஸிங்!! ஆனா இவர் வந்த நேரமோ என்னவோ, ஜேம்ஸ் கேரக்டருக்கு கொஞ்சம் ரியாலிடியை கொடுக்கிறேன் பேர்வழினு ஜேம்ஸ் யூஸ் பண்ற வித்தியாசமான கருவிகளைப் பிடுங்கிக்கிட்டாங்க. சில இடங்கள்ல தோத்துப்போறாரு, வில்லன்கள்கிட்ட மாட்டிக்கிறாரு, உதை வாங்குறாரு, படக்கூடாத இடத்துல அடிபடுது. யாரு இதையெல்லாம் கேட்டா? அழுக்குப் படாம ஆக்ஷன், அட்வென்ச்சர்னு பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே.? ஜேம்ஸுக்கு என்ன ரியாலிடி?
ஸ்கைஃபால்!
பாண்ட் சினிமாவுக்கு அறிமுகமாகி 50வது ஆண்டில் வெளியாகும் 23வது படம்.
எப்படி, எதுக்குன்னெல்லாம் கேட்கப்பிடாது.. அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிப்போய் இருந்தது எனக்கு. அந்த எதிர்பார்ப்புக்கு இது ரொம்பவே ஏமாற்றம்தான். வில்லனாகப்பட்டவர் ஜேம்ஸைப் போலவே திறமையான Mi6ன் (முன்னாள்) உளவாளி, அவரது அதிருப்தி மற்றும் அவரது டார்கெட் M என்றெல்லாம் களத்தை செமையாய் ரெடி செய்த பின்பும் படம் சொதப்பிடுச்சு. ஓபனிங் சேஸிங்கைத் தவிர்த்து, படம் பூரா சவசவ. பத்தும் பத்தாததுக்கு அத்துவானக் காட்டுல மொக்கை கிளைமாக்ஸுன்னு கொஞ்சம் கஷ்டமாப் போயிடுச்சு. இன்னும் நிறையச்சொல்லலாம். ஆனா பூரா நெகடிவாத்தான் இருக்கும். ஒரு படத்துக்காகவெல்லாம் ஜேம்ஸைப் பற்றி அப்படியெல்லாம் அவதூறு பரப்பக்கூடாது.. வாங்க, ஒழுங்கா அடுத்த படத்துக்காக வெயிட் பண்ணுவோம், ஓகே.?
இப்போதைக்கு இந்த சேஸைப் பார்த்து கொஞ்சம் மனசைத் தேத்திக்குங்க.. http://www.youtube.com/watch?v=m5M5R2pcPJ0
.